தற்போதைய பதிவுகள்

மே தின திருவிழா பொதுக்கூட்டம்:

வாட்டாக்குடி இரணியன் நினைவு நாள் முழக்கம் தங்க குமரவேல்:

https://youtu.be/410BgWQPc-E

                      

முக்கிய பதிவுகள்:

அதிராம்பட்டினத்தில் … குழந்தை ஆஷிஃபாவிற்கு நீதிகேட்டு 20.04.2018 அன்று மாலை நாம் மனிதர் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:

அதிரையில் ஆஷிஃபாவிற்கு நீதிகேட்டு தங்க குமரவேல் பாகம் 1. https://youtu.be/cqWpNZ59xv4

அதிரையில் ஆஷிஃபாவிற்கு நீதிகேட்டு தங்க குமரவேல் பாகம் 2. https://youtu.be/MC3a9cV_zFg

நாம் மனிதர் கட்சி ஆஷிஃபாவுக்கு நீதிகேட்டு அதிரையில் முழக்கம்.. https://youtu.be/cSmDhTHmJPs

நாம் மனிதர் கட்சி ஆஷிஃபாவுக்கு நீதிகேட்டு பேரணி முழக்கம்.. http://tamilagamakkal.com/kolgai-arikkai-in-english/  

கனத்த இதயத்துடன் இதை பதிவிடுகிறேன்….
காஷ்மீரில் 8 வயது குழந்தை ஆசிபாவை 8 வெறிப்பிடித்த RSS ,BJP வெறிநாய்களால் பல நாட்கள் கூட்டாக கற்பழித்து சிதைக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட செய்திக் கேள்விப்பட்டு தூக்கம் இல்லாமல் தவித்தேன்.
இதுவரை உலகில் எந்த மிருகங்களும் செய்ததில்லை
அந்த கொடியவர்கள் இந்த பூமியில் வாழ தகுதியற்றவர்கள் இந்த பூமியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும்.
ஈழத்தில் சிங்களவன் என்ன என்ன கொடுமைகளை செய்தானோ அதே கொடுமைகளை செய்யக்கூடிய வர்களாக அதே மனநிலையில் இருக்ககூடிய கொடியவர்களாக RSS,BJP ம் இருக்கிறது. அரியலூர் நந்தினி இன்று ஆசிபாவும் பலியாகி இருக்கிறார்கள் இந்த நிலை இனிமேல் தொடரக்கூடாது.
இதுப்போன்ற ஒரு செயலை இஸ்லாமியர்கள் செய்திருந்தால் இந்த பிரச்சினை என்னவாக இருக்கும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்க குமரவேல்
தமிழக மக்கள் விடுதலை இயக்கம்.

image
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்தநாளையொட்டி 14.4.2018 அன்று பட்டுக்கோட்டையில் உள்ள புரட்சியாளர் படத்திற்கு மாழை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் குழு உறுப்பினர் தோழர் கவிமுருகன் தலைமை தாங்கினார் அரசியல் குழு உறுப்பினர் மா.நா.விடுதலை மறவன்,பொ.ராஜேந்திரன்,முத்து.பிரகாசம்,ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் தங்க குமரவேல் மாழை அணிவித்து மரியாதை செலுத்தினார். தோழர்கள் குமார், வீரக்குமார்,கு.உ.தாமு,கு.உ.நறுமுகை,த.சுந்தர், பெ.சிவா ,நி.பாலசுப்ரமணியன் சு.லெனின், ப.சேகுவேரா, பெ.அ.தினேஷ் பெ.சாம்ராஜ் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாசகார மோடியை கண்டித்து.... இன்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி எதிர்ப்போம் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்போம் தமிழ் மக்களின் இத்தனை போராட்டங்களையும் அலட்சிய படுத்தும் மோடியின் மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து இந்த நாளை கருப்பு நாளாக கடைப்பிடிக்க தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முடிவுசெய்துள்ளது. தனித் தமிழ் நாடே தீர்வு வேறு வழி இல்லை ... இனி... தனித் தமிழ்நாடு இந்திய ஒன்றிய தேசிய இனங்களின் விடுதலை நோக்கிப் பயணிப்போம் .... தமிழ்நாட்டு மக்களையும் தமிழ் மண்ணையும் காப்போம்! காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் துரோகம் செய்விட்டது. இந்திய ஒன்றிய பிரதமர் மோடியும் துரோகம் செய்கிறார். பாராளுமன்றமும் துரோகம் செய்துவிட்டது. மாநில அரசும் அடிமை அரசாக மாறிவிட்டது ... சர்வதேச நதிநீர் சட்டத்தின் மூலம் காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். ஆனால் ஒரே நாட்டிற்குள் நடைபெறும் நதிநீர் பிரச்சனையில் தலையிட முடியாது. ஆகவேதான் தனித் தமிழ் நாடு அவசியமாகிறது. வேறு வழி இல்லை காவிரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல்கேஸ் ,கூடங்குளம் அணு உலை, நீயூட்ரினோ ,தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆயுதங்களை கொண்டு மோடி அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் இணைந்து தமிழ் மண்ணில் போரை தொடுத்துள்ளனர். அதை முறியடித்தது மக்களையும் மண்ணையும் காக்க வாருங்கள் வீதிக்கு என்று அழைக்கிறது. தமிழக மக்கள் விடுதலை இயக்கம்.

டெல்டாவைக் காப்போம் – 500 பொதுக்கூட்டங்கள் டெல்டாவைக் காப்போம் – 001/500 (மதுக்கூர்) டெல்டாவைக் காப்போம் – 002/500 (பேராவூரணி) டெல்டாவைக் காப்போம் – 003/500 (ரெட்டவயல்)
இயக்க கொள்கை உறுதி ஏற்பு இயக்க கொள்கை உறுதி ஏற்பு
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
செயற்குழுக் கூட்டம் 17.02.2014 செயற்குழுக் கூட்டம் 17.02.2014
மீத்தேன் எடுப்பதை தடுக்க துண்டறிக்கை பிரச்சார இயக்கம் மீத்தேன் எடுப்பதை தடுக்க துண்டறிக்கை பிரச்சார இயக்கம்
பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் 01.12.2013 நடத்திய வீரவணக்க பொதுகூட்டத்தில் தங்க குமாரவேல் ஆற்றிய உரை
அண்ணல் அம்பேத்கரின் 57வது நினைவு நாள் 6, டிசம்பர் 2013 அண்ணல் அம்பேத்கரின் 57வது நினைவு நாள் 6, டிசம்பர் 2013
நெல்சன் மண்டேலாவிற்கு வீர வணக்கம் 06, டிசம்பர் 2013 நெல்சன் மண்டேலாவிற்கு வீர வணக்கம் 06, டிசம்பர் 2013
மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி ! மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி !
சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை
வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு
கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு

கீழ வெண்மணித் தியாகிகள் 49-ஆம் ஆண்டு நினைவு நாள் 25.12.2017

                                வீர வணக்கம்….
     49-ஆம் ஆண்டு நினைவு தினம்….
                (25.12.1968 – 25.12.2017)

44 உயிர்கள் தீயில் கருகிய நாள்….

20 பேர் பெண்கள் (அதில் 2 பேர் நிறைமாத கர்ப்பிணி)
19 பேர் சிறுவர்கள் (14 வயதைத் தாண்டாதவர்கள்)
5 பேர் ஆண்கள் (முதியவர் உட்பட)

  ஒரு படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிக்கொண்டிருந்தவர்களை நிலப் பிரபுக்களின் தலைவன் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் அடித்து விரட்டப்பட்டவர்களில் 44 பேர் ராமையாவின் குடிசைக்குள் தஞ்சம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் உள்ளே வைத்து தாழிட்டு குடிசையின் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார்கள் அந்தக் கயவர்கள்.
கருகியது 44 உயிகள்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது..
(அப்போது அண்ணா முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
வழக்கு அந்த ஈனப்பிறவிகளுக்குச் சாதகமாக அமைந்தது.அனைவரும் விடுதலையானார்கள்.
ஆனால்…
ஆனால்…
நம்மவர்கள் அந்த கோபாலகிருஷ்ண நாயுடுவை
44 கூறுகளாக வெட்டிப் போட்டார்கள் என்பது தனிக்கதை.

  ஆகவே இப்போதுள்ள ஆட்சியாளர்கள் நிலப் பிரபுக்களின் வடிவில் இருந்துகொண்டு ஷேல் கேஸ்,மீத்தேன்,ஹைட்ரோகார்பன்,நியூட்ரினோ,அணு உலை போன்றத் திட்டங்களைச் செயல்படுத்தி நம் மண்ணை நாசமாக்கத் திட்டமிடுகிறார்கள்.அதை மடைமாற்றம் செய்வதற்காக சாதிவெறி,மதவெறி மோதல்களை செயற்கையாக உருவாக்குகிறார்கள்.

       நாம் விழிப்புடன் இருந்து இந்த மண்ணையும்,மக்களையும் காக்க.. இவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடவில்லையென்றால் நாமும் தீயில் கருகும் நாள் வெகு தூரமில்லை.

                       தமிழக மக்கள் விடுதலை இயக்கம்.

தந்தைப் பெரியார் 44-ஆவது நினைவு நாள் 24.12.2017
 
Image may contain: 4 people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing and outdoor
 
மதுக்கூரில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினர் மா.நா.விடுதலைமறவன் மாலை அணிவித்தார்.தோழர்கள் கவிமுருகன் அரசியல் குழு,மா.பிரகாசம்,பொ.ராஜேந்திரன்,கி.சகாதேவன்,காளியப்பன்,காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு அனைவரும் தந்தையின் வழி நடப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர். (24.12.2017)
பகத்சிங் நினைவுநாள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ரெட்டவயலில் மார்ச் 23 அன்று விடுதலைப் போராட்ட வீர்ரான பகத்சிங் நினைவுநாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். கூட்டத்தில் சி.பி.ஐ தோழர் நாகலிங்கம், சி.பி.எம் மாவட்டக்குழு வீ.கருப்பையா, பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் அனல் ச.ரவீந்திரன், திராவிடர் விடுதலைக் கழக சேது ஒன்றிய அமைப்பாளர் சுப.ஜெயச்சந்திரன், முத்தையா, உமாநாத் ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக பகத்சிங் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட்து. - தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

ஏப்ரல்14, 2016 அம்பேத்கர் நினைவு நாள்

ஏப்ரல்14, 2016 பட்டுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு தங்க குமரவேல் மாலை அணிவித்தார் - தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

வீடியோக்கள்
இயக்கம் உருவான வரலாறு

தமிழக மக்கள் விடுதலை பெயர் விளக்கம்

பிறப்பின் அடிப்படையில் தமிழ் நாட்டை தாயகமாகவும் தமிழை தாய்மொழியாகவும்கொண்ட மக்களையும் , நீண்ட நெடுங்காலத்திற்கு முன் தமிழகத்துக்கு வந்து குடியேறிய , உணர்வாலும் ,பண்பாட்டாலும் தமிழராக மாறிய மக்களையும் ,தமிழ் நாட்டின், தமிழ் மக்களின் , தமிழ்மொழியின் நலத்திற்கு எதிராக செயல் படாதோரையும் தமிழக மக்கள் என்று எமது இயக்கம் ஏற்கிறது . அந்த மக்களை சாதீயம் , சமயம் , நில பிரபுத்துவம் , அரைமுதலாளிதுவம், பன்னாட்டு வல்லாண்மை, போன்ற மக்களுக்கு எதிரான அடிமைத் தளைகளில் இருந்து விடுதலை செய்வத் எனும் நோக்கில் எமது இயக்கதிற்கு '' தமிழக மக்கள் விடுதலை இயக்கம் '' என பெயரிட்டோம் .

தமிழக மக்களுக்கு ...

தமிழக மக்கள் விடுதலை இயக்கம் கீபீ 2007ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் தொடங்கப்பட்டது.

சாதி ஒழிப்பு , தமிழ் தேசியம், என்னும் இரண்டும் பின்னிப் பிணைந்தால் தான் உண்மையான பொதுஉடைமை மலரும் அதனால் எமது இயக்கம் இந்த மூன்றையும் உள்ளடக்கிய ஒரு செயல் திட்டத்தை முன் வைக்கிறது .

சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று – இதில் பாதியை நாடு மறந்தால் – மற்ற பாதி துலங்குவதில்லை !! – புரட்சி கவிஞர் !